நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று காலை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பசிப்பிணி போக்கிய அரசு. தமிழ்நாட்டில் பசியால் யாரும் வாடக்கூடாது என்ற தாரக மந்திரத்தின் விளைவாக, இன்றைக்கு தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றுகின்ற மக்கள் கூட, அவர்கள் காலை உணவின்றி பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் இதை அறிவித்திருக்கின்றார்கள். தொடர்ந்து நம்முடைய அரசு எடுத்து வருகின்ற இப்படிப்பட்ட திட்டங்களின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் யாரும் பசியால் வாடவில்லை. ஸ்டார்வேஷன் (பட்டினி) என்பது இல்லை என்ற ஒரு நிலைக்கு நாம் வந்திருக்கின்றோம் என்றார்.
