- ஜே
- மாஜி அமைச்சர்
- ஓமண்டூர்
- வில்லப்புரம் மாவட்டம் திண்டிவனம்
- ஆதிமுகா ஜே.
- Arjunan
- சட்டமன்ற உறுப்பினர்
- சி. வி. சன்முகம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக ஜெ. பேரவை ஆலோசனை கூட்டம் பேரவை மாவட்ட செயலாளர் அர்ஜுனன் எம்எல்ஏ தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சமீபத்தில் அதிமுகவில் இணைந்த முன்னாள் ஏ.டி.எஸ்.பி சங்கர் தற்போது மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சங்கர், பத்துக்கு பத்து அளவில் கீழ்பென்னாத்தூரில் டீக்கடை வைத்திருந்தேன். அதிமுக ஆட்சியில் தான் எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி கிடைத்தது. அதனால் தான் அதற்கு நன்றியாக தற்போது அதிமுகவில் உள்ளேன் என்று கூறினார். மேலும் இவர் பதவியில் இருந்தபோது சி.வி சண்முகத்திற்கு ஆதரவாக பல்வேறு உதவிகளை செய்ததாக கூறப்படுகிறது. முன்னாள் டி.ஜி.பி திலகவதியின் மகன் பிரபுதிலக், ஏ.டி.எஸ்.பி சங்கருடன் பேசிய ஆடியோ வெளியாகியது.
அதில், சங்கரை வெளுத்து வாங்குவதால் அவரது புகழ் காற்றில் பறந்தது. இந்த விவகாரம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் சேர்ந்த இவருக்கு மாநில அளவில் பதவி வழங்கியது அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. தற்போது இவர் தியாகி போல் பேசி வருகிறார். ஆனால் இவரின் கதை எல்லாம் எங்களுக்கு தெரியாதா என அதிமுக தொண்டர்களே முணுமுணுக்கின்றனர்.
இதனால் விழுப்புரம் அதிமுகவில் சி.வி.சண்முகத்தின் பலம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சி.வி.சண்முகத்தின் முன் பேசிய வானூர் எம்எல்ஏ சக்கரபாணி, ஜெயலலிதா பேரவை என்று ஒரு அணி உள்ளதே இப்போது யாருக்கும் தெரியவில்லை. ஒரு காலத்தில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டது. ஆனால் இப்போது இப்படி செயல்பட்டு வருகிறது. நோட்டீசில் உள்ள 2000 பேர் வரவேண்டிய இடத்தில் கூட்டமே இல்லையே. அவர்களை பெயர் அளவிற்கு அழைப்பது மட்டும் பத்தாது.தேர்தல் நேரம் நிர்வாகிகளை அழைத்து வர வேண்டும் என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அணியின் மாவட்ட செயலாளர் திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன், அடுத்தபடியாக பேசும் போது, நானே அனைத்து நிர்வாகிகளுக்கும் போன் செய்து அழைத்தேன். ஆனால் வரவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். 2 எம்எல்ஏக்களும் சி.வி.சண்முகம் முன் எதிர் எதிர் கருத்துகளை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வானூர் தொகுதியில் சக்கரபணிக்கு சி.வி.சண்முகம் வாய்ப்பு அளிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
இதனால் கட்சியில் அர்ஜுனனின் பணிகள் குறித்து சண்முகத்தின் முன் சக்கரபாணி சுட்டிக்காட்டியதாகவும் அவருக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என்பது போல் நடந்து கொண்டதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க சண்முகத்தின் மீதே மன்னர் ஆட்சி போல் செயல்படுகிறார் என்றும், பேச்சுக்காக நேர்காணலை நடத்தினார் என்றும் அவரை மீறி எதுவும் செய்யவில்லை என்று இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் தேர்தல் நேரத்தில் அவருக்கு எதிரான வேலையை அந்த நிர்வாகிகள் பார்க்க இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.
