நன்றி குங்குமம் தோழி
*அத்திப்பழம் நார்ச்சத்தும், தாதுக்களும் நிறைந்த பழமாகும். அதில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
*கிரேக்கர்கள் காலத்திலிருந்தே அத்திப்பழம் குழந்தைபேறுக்காக சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது கரு உருவாக உதவும் என்பது ஆய்விலும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
*அத்திப்பழத்தில் பிரிபயோடிக் என்னும் பண்பு உள்ளது. இது செரிமான மண்டலத்தில் வேலையை சிறப்பாக மாற்ற உதவும்.
*தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
*உடல் எடை குறைக்க நினைப்போர் உலர்ந்த அத்திப்பழத்தை 2 சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வயிறு முழுமையாகிவிடும். இதனால் நீண்ட நேரம் பசிக்காது. சாப்பாடு குறைவாக சாப்பிட தோன்றும்.
*அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் மலச்சிக்கலுக்கு நல்லது. வெறும் வயிற்றில் உலர்ந்த அல்லது பழுத்த அத்திப் பழங்களை 2, 3 என தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.
*பொட்டாசியம் சமநிலையில் இல்லாத போது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே இதை சரி செய்ய நிறைவான பொட்டாசியம் சத்து கொண்ட அத்திப்பழம் சாப்பிடுவது உங்களுக்கு உதவும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
*அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.
*அத்திகாய்களை சமைத்து உண்டு வர, ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.
*அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது.
*சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.
தொகுப்பு: தவநிதி
