நன்றி குங்குமம் தோழி
மஞ்சள் மங்கலத்தின் சின்னம்! ஒரு சிறந்த கிருமிநாசினி. அதோடு கிராமப்புறப் பெண்களுக்கான அழகு சாதனம். இதன் மருத்துவ குணங்கள் சிலவற்றை காண்போம்…
*விரலி மஞ்சளை சுட்டு புகையை உறிஞ்ச மூக்கடைப்பு விலகும்.
*சேற்றுப் புண்களுக்கு மஞ்சளை தூவ புண் ஆறும்.
*பித்த வெடிப்புகளுக்கு மஞ்சளும் மருதாணி இலையையும் அரைத்து பூச குணம் காணலாம்.
*கஸ்தூரி மஞ்சளை அரைத்து முகப்பருவின் மீது மருந்தாக பயன்படுத்த குணமாகும்.
*தீப்புண், வெட்டுக்காயங்களின் மீது மஞ்சளை தூவுவதன் மூலம் நலம் பெறலாம்.
*கஸ்தூரி மஞ்சள், கடலைப்பருப்பு, பாசிப்பயறு ஆகியவற்றை சம அளவு இடித்து எடுத்து, உடலில் தேய்த்துக் குளிக்க சரும நோய்கள் குணமாவதுடன் உடல் பளபளப்பு கூடுகிறது.
*மஞ்சள் இலையுடன் எருக்கன் பாலை விட்டரைத்து வீக்கங்களின் மீது தடவ வீக்கம் வற்றும்.
*மஞ்சள் தூளை பாலாடையில் குழைத்து, இரவில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு மறையும்.
*ஒரு நெல்லிக்காய்அளவு அரைத்த மஞ்சளை மோரில் கலந்துண்ண உள் மூலம் ஆறும்.
*மஞ்சள் பொடியை நெல்லிக்காயுடன் நீரிலிட்டுக் காய்ச்சி அருந்த நீரிழிவு கட்டுப்படும்.
*மஞ்சளை நறுக்கி தேன் கலந்து உண்ண மேக நோய்கள் விலகும்.
தொகுப்பு: லதா, நீலகிரி.
