- திமுக
- கோயம்புத்தூர்
- அஇஅதிமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 2021 சட்டமன்றத் தேர்தல்கள்
- மேற்கு தமிழ்நாடு
தமிழகத்தில், 2021 சட்டமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் 133ல் வென்று ஆட்சி அமைத்தபோதிலும், மேற்கு தமிழ்நாட்டின் 68 தொகுதிகளில் வெறும் 24 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. கோவை மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. அதிமுக 9 இடங்களிலும், பாஜ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
2021 முதலே களப்பணிகளை மேற்கொண்டாலும், கடந்த சில மாதங்களில் மேற்கு பகுதியில் கணிசமான அரசியல் முதலீடுகளை திமுக செய்துள்ளது. கோவையில் தொழிலதிபர் ஜி.டி.நாயுடு பெயரில் மேம்பாலம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவக சங்கிலியின் இயக்குநர் டி.சீனிவாசன் தமிழ்நாடு அரசு உணவு ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் ஆகியவை நாயுடு சமூகத்தினரால் வரவேற்கப்பட்டுள்ளன.
அதேபோல், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், கோவை மண்டலத்தில் அதிமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு மண்டலத்துக்கு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களுக்கு பிறகு இங்குள்ள மக்களின் மனநிலையில் மாற்றம் உருவாகியுள்ளது. அது, திமுக பக்கம் ஓட்டாக மாறும் நிலை உருவாகி இருக்கிறது. அதனால், இம்முறை இம்மண்டலத்தில் திமுக எழுச்சி பெற்றுள்ளது.
2021 உள்ளாட்சி தேர்தலிலும், 2024 மக்களவை தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றாலும், உண்மையான மாற்றம் 2025 பிப்ரவரியில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர்தான் நிகழ்ந்தது. அதாவது, ஒட்டுமொத்த கொங்கு நாட்டு மக்களும் திமுக பக்கம் நிற்கிறார்கள் என தெரியவந்தது. இதன்மூலம் மேற்கு பகுதியில் வலுவான தளத்தை கொண்டுள்ள திமுக இம்முறை சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கோவை மாவட்டத்தில், கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 7 தொகுதிகளில் வெற்றிபெறும் நிலை உருவாகியுள்ளது. அதிமுக கூட்டணி தொண்டாமுத்தூர், சூலூர், சிங்காநல்லூர் ஆகிய 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
