×

இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம்: திருவையாறு பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

 

திருவையாறு: இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் NDA கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக தலைமை இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலிலும் ஒரு முறை திருவையாறு தொகுதி கூட்டணி கட்சிகளுக்கே வழங்கியது. இந்த நிலையில் NDA கூட்டணியில் உள்ள அம்மா முன்னேற்றக் கழகத்திற்கு திருவையாறு தொகுதிக்கு அதிமுக சீட் ஒதுக்கியதாக கூறப்பட்ட நிலையில் திருவையாறு,

திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் சுவர்களில் இரட்டை இலை சின்னம் எங்கே என்றும் திருவையாறு தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் போட்டியிட முடியாமல் தடுக்கும் துரோகியிலே என்றும் இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் இப்படிக்கு அதிமுக உண்மை தொண்டன் என்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Tags : Thiruvayaru ,Thiruvaiyaru ,Supreme ,NDA ,Tanji district ,
× RELATED திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்: திருமாவளவன் பேட்டி