×

விபத்தில் சிக்கி வாய்க்காலில் கவிழாமல் தலைகீழாக அந்தரத்தில் தொங்கிய கார்

முசிறி; திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த தினேஷ்(25) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் சங்கர்(22), தமிழ்ச்செல்வன் (29), ஹரிஷ் (19) ஆகிய 4 பேரும் காரில் சமயபுரம் கோயிலுக்கு இன்று அதிகாலை வந்தனர். காரை தினேஷ் ஓட்டினார். தரிசனம் முடிந்து மீண்டும் காலை 7.30 மணியளவில் ஊருக்கு திரும்பினர். திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் முசிறி சந்தப்பாளையம் அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வரத்து வாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு, அருகிலிருந்த மரத்தில் மோதி, வாய்க்காலில் விழாமல் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியது.

இதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தினேசுக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்ற மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. விபத்தைக் கண்ட அப்பகுதியினர் அனைவரையும் மீட்டு முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Musiri ,Dinesh ,Alamarathupatti ,Trichy district ,Shankar ,Tamilselvan ,Harish ,Samayapuram temple ,
× RELATED நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே...