×

வாய்க்காலில் அழுகிய நிலையில் பெண் சடலம் சிமெண்ட், கம்பி விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, பிப். 3: சிமெண்ட், ஜல்லி, கம்பி விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதை கண்டித்து மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலைவாணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சேகர், அதியமான், சங்கர், சரவணன், ராமலிங்கம், ராதாகிருஷ்ணன், ராஜகோபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் முடிவில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெகமுருகன் கூறும்போது, எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திடீரென சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பி நிறுவனங்கள் விலையை ஏற்றியுள்ளன. மழை காலத்தில் கட்டுமான பணிகள் தடை பட்டிருந்தது. உடனடியாக மாநில அரசு தலையிட்டு விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றார்.

Tags : state ,drain Demonstration ,
× RELATED படிக்கட்டில் பயணம் செய்தபோது ரயிலில்...