×

‘விருப்ப மனு வாங்க ஆளே இல்லை’; தமாகாவுக்கு சீட் வரும்… ஆனா வராது! ஜி.கே.வாசன் விரக்தி

மதுரையில் தமாகா தென்மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். கூட்டத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என கூறப்பட்டது. கட்டணமாக ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்கள் வந்திருந்த அளவிற்கு விண்ணப்பங்களின் விற்பனை போகவில்லை. நிருபர்கள் வாசனிடம், ‘‘தேஜ கூட்டணியில் தமாகாவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்’’ என கேட்டதற்கு ‘‘எங்களுக்கு 234 தொகுதியிலும் போட்டியிட தொண்டர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர்.

ஆனால், கூட்டணியில் இருந்து சீட் வரும்… ஆனால் வராது என்பதைப் போலத்தான் நிலைமை. நாங்கள் கூட்டணிக்காக ஆதரவும், ஆலோசனையும் வழங்கி வருகிறோம். தேர்தலுக்கான அடித்தள பணிகளை துவங்கியுள்ளோம். விஜய் கட்சியின் வாக்கு சதவீதம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு சதவீதத்தை கூறி வருகின்றனர். மக்கள் தான் எஜமானர்கள்’’ என்றார்.

Tags : Tamaka ,G. ,Tamaga South Zone Consultative Meeting ,Madura ,Akhatsi ,G. K. VASSAN ,
× RELATED தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில்...