×

யார் பயந்தாங்கொள்ளி? தவெக மேடையில் ஆதவை அலற விட்ட ரஜினி ரசிகர்

 

சென்னை: சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் வீனஸ் பகுதியில் த.வெ.க., கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி ரசிகர் பேசுகையில், ‘‘நான் 45 ஆண்டுகள் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்தேன். 10 நாட்களுக்கு முன்பு தான் தவெகவில் சேர்ந்தேன். நேற்றுதான் ரஜினி ரசிகர் மன்ற பதவியை ராஜினாமா செய்தேன். ரஜினி ஒரு அற்புதமான மனிதர். அவர் பயந்தாங்கொள்ளி அல்ல. போராட்ட குணமுடையவர். நிறைய பேரை எதிர்த்து குரல் கொடுத்த மனிதர்.

அப்படி ஒரு தைரியசாலியை நீங்க பார்க்க முடியாது. ரஜினி பற்றி எந்த எண்ணத்தில் ஆதவ் அர்ஜூனா இப்படி பேசினார் என்று தெரிஞ்சுக்க ஆசைப்படறேன். உலகம் முழுக்க இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்க விரும்புறேன். ரஜினியை பற்றி யாராவது பேசுனா உங்க சார்பாக கேள்வி கேட்பேன். ஏன் பேசுனீங்கன்னு புரிய வைக்க சொல்லுவேன்.

உலக முழுக்க இருக்க ரஜினி ரசிகர்கள் சார்பில் நான் தவெகவில் இருக்கிறேன் என்று புரிஞ்சுகிட்டு என்று… (அப்போது, ஆதவ் அர்ஜூனா முகம் மாறியது. உடனே, ரஜினி ரசிகர் பேச்சை கேட்காமல் அருகில் இருந்த நாஞ்சில் சம்பத்திடம் பேசி கொண்டிருந்தார். இதை கவனித்த ரஜினி ரசிகர், ஆதவ் சார்… இங்க பாருங்க என்று மிரட்டும் தொனியில் கூப்பிட்டு எதற்கு பேசுனீர்கள் என்று புரிய வைங்க என்றார்). இவ்வாறு பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : T.V.A. ,Chennai ,Perambur Venus ,Kolathur ,Rajini ,
× RELATED தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில்...