×

வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய ட்ரம்புக்கு நன்றி: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியா – அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறும் என அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரியளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த வலுவான ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்கு அதிபர் ட்ரம்புக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார். பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு சிறப்பான செய்தி நமது இரு நாடுகளுக்கு இடையே நாங்கள் இடைக்கால ஒப்பந்தம் செய்திருக்கிறோம். நமது நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அர்ப்பணிப்புக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையையும், ஆழமான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவில் சிறு, குறு விவசாயிகள், தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், மீனவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மேக் இந்தியா திட்டம் வலுவாகிறது. இதனால், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Trump ,Modi ,Delhi ,President Trump ,India ,US ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் வேகமாக...