×

சென்னையில் 2 கட்டமாக நடக்கும் பிளஸ் 2 செய்முறை தேர்வு 9ம் தேதி தொடக்கம்

சென்னை: பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் 9ம் தேதி தொடங்க உள்ளன. சென்னையில் இரண்டுகட்டமாக செய்முறைத் தேர்வு நடக்கிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் தேர்வில் பங்கேற்க உள்ளவர்களின் பெயர் பட்டியல்களை சரிபார்க்கும் பணியை தேர்த்துறை நடத்தி முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தேர்வு எழுத தகுதியுள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிப்ரவரி மாதம் செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், பிளஸ் 2 வகுப்புக்கு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இரண்டுகட்டமாக நடத்தப்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், கடந்த ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவ, மாணவியருக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகள் நடக்கும்.

இந்த செய்முறை தேர்வு இரண்டுகட்டமாக நடத்தப்படும். அதன்படி முதல்சுற்று 9ம் தேதி முதல் 12ம் தேதி வரையும், இரண்டாம் சுற்று 13ம் தேதி முதல் 17ம் தேதி வரையும் நடக்கும். மேலும், கடந்த 2024-25 கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவ, மாணவியருக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் நடக்கும்.

செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் போது காலை 9 மணி முதல் 11 மணி வரை ஒரு பிரிவினருக்கும், காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அடுத்த பிரிவினருக்கும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணிவரையில் மூன்றாவது பிரிவினருக்கும் என 3 பிரிவுகளாக நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...