×

பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ‘தமிழ்நாட்டின் நிதி உரிமை பறிக்கப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜகவின் முரட்டு அடிமையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என துணை முதலமைச்சர் விமர்சித்துள்ளார். பழைய – புதிய அடிமைகள் என எத்தனை பேர் வந்தாலும் திமுக கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெல்வது உறுதி.

வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய பாஜக அரசு பல தொல்லைகளை கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை வழங்காமல் இந்தி, சமஸ்கிருத்தை திணிக்க பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டை சேர்ந்தவர் என கூறும் ஒன்றிய நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு என் உரிய நிதியை ஒதுக்கவில்லை என துணை முதல்வர் கேள்வி எழுப்பினர். நிதியை அறிக்கையில் தமிழ் என்ற பெயரைகூட நிர்மலா சீதாராமன் குறிப்பிடவில்லை என கூறினார்.

Tags : Union government ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,BJP's… ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சுந்தர், வருண் வாழ்த்து