தூத்துக்குடி: கோவில்பட்டியில் மது அருந்தியதை தட்டிக் கேட்ட கட்டிட தொழிலாளி கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில், தனது வீடு அருகே கார்த்திக் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை கண்டித்துள்ளார். இதனை கண்ட ஆத்திரமடைந்த வேல்முருகன், அய்யாதுரை, முனியசாமி ஆகியோர் செங்கல்லால் தாக்கியதில் கார்த்திக் உயிரிழந்தார். கார்த்திக் கொலை வழக்கில் வேல்முருகன், அய்யாதுரை, முனியசாமியை போலீசார் கைது செய்தனர்.
