×

திருப்பதியில் போலீசார் அதிரடி 6 செம்மரக்கட்டைகளை கடத்திய 2 பேர் கைது

திருமலை : திருப்பதி செம்மரக்கடத்தல் அதிரடிப்படை தலைவர் எல்.சுப்பாராயுடுவின் நடவடிக்கைகளின்படி, எஸ்பி ஸ்ரீனிவாஸ், ஏஎஸ்பி ஜே.குலசேகரின் மேற்பார்வையில் டி.எஸ்.பி. எம்.டி. ஷரீப், ஆர்.ஐ சாய் கிரிஹாதர், ஏஆர்எஸ்ஐ ஈஸ்வர் ரெட்டி குழுவினர் கேவிபிபுரம் மண்டலத்தில் ரோந்து சென்றனர்.

அங்கு அப்பகுதி எப்பிஓ எம். சுரேஷ் குமாருடன், மாரப்பரெட்டி காண்ட்ரிகா சோதனைச் சாவடியில் வாகனங்களை ஆய்வு செய்தனர். நேற்று அதிகாலை, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை அதிரடிப்படை போலீசார் கண்டறிந்து நிறுத்த முயன்றனர்.

அதற்குள் கடத்தல்காரர்கள் சிறிது தூரத்தில் காரை நிறுத்தி அதிலிருந்து இருவர் இறங்கி தப்பி ஓட முயன்றனர். இருப்பினும், அதிரடிப்படை போலீசார் அவர்களை துரத்திச் சென்று பிடித்தனர். காரில் சோதனை செய்ததில் 6 செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வது அறிந்து அவர்களை கைது செய்யப்பட்டு விசாரித்ததில் அவர்கள் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை காருடன் திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு டிஎஸ்பி வி. ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் ஏசிஎப் ஜே. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் விசாரணை நடத்திய பின்னர் இன்ஸ்பெக்டர் காதர் பாஷா வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Tirupati ,Thirumalai ,Thirupathi Semmarakadathal ,Force ,Subarayuda ,SP Srinivas ,ASP J. ,Kulasekar ,D. S. B. M. D. Sharif ,R. I Chai Grihadar ,ARSI ,Iswar ,Reddy ,Kavipipuram ,EPO ,
× RELATED கோவில்பட்டியில் மது அருந்தியதை...