×

சென்னை முகப்பேர் பகுதியில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது

 

சென்னை: சென்னை முகப்பேர் பகுதியில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது செய்துள்ளனர். பெங்களூரில் வேலை செய்த மகன் நிகில் பிரிட்டோ (28) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாததால், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய தாய் ஆக்ஸிலா (55) தொடர்ந்து மகனிடம் வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இன்று ஏற்பட்ட தகராறில் தாயை நிகில் பிரிட்டோ கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்தார். தனது நண்பர்களுக்கு இது குறித்து அவர் தெரிவிக்க, அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்

Tags : Mukapere ,Chennai Chennai ,Chennai ,Nigel Brito ,Bangalore ,
× RELATED தம்பதி சண்டைக்கு நியாயம் கேட்க சென்ற...