×

டெல்லி குண்டுவெடிப்பு அல்பலா பல்கலை தலைவர் கைது

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி இரவு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். என்ஐஏ விசாரணையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் உமர்-உன்-நபி என்பது தெரியவந்தது.

அதை தொடர்ந்து, இந்த வழக்கில் 4 மருத்துவர்கள், ஒரு மத போதகர் உள்பட 8 பேரை என்ஐஏ கைது செய்தது.  இதைத்தொடர்ந்து தனியார் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் தொடர்பான அல்பலா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜாவத் அகமது சித்திக்கை டெல்லி காவல்துறை நேற்று கைது செய்தது.

Tags : Delhi ,Alfalah University ,president ,New Delhi ,Red Fort ,NIA ,Faridabad, Haryana ,
× RELATED 24 , 48 மணி நேரம் டெலிவரி உத்தரவாதம் தபால்...