×

பிராடு, டுபாக்கூர், ஆக்டிங் என்.டி.ஏ அல்ல எப்.டி.ஏ: லியோனி புது டைட்டில்

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, என்டிஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) கூட்டணிக்கு சுவாரஸ்யமாக புதியவிளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அவர் கூறுகையில், ‘‘பாஜவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணியை என்டிஏ கூட்டணி என்று கூறுகிறார்கள். என்டிஏ என்பதன் முழு அர்த்தம் தெரியுமா? ‘ேநஷனல் டிசாஸ்டர் அலையன்ஸ்’ என்பதன் சுருக்கமே என்டிஏ.

அதாவது தேசத்தை சீரழிக்கும் கூட்டணி. இந்த கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடி, சிஎம்சி என்ற மூன்றெழுத்தை கூறினார். இன்று நான் எப்.டி.ஏ என்ற மூன்றெழுத்தை அழுத்தமாக பதிவு செய்கிறேன். எப்-என்றால் பிராடு, டி-என்றால் டுபாக்கூர், ஏ-என்றால் ஆக்டிங். இந்த மூன்றும் சேர்ந்த அந்த கூட்டணியை இனி என்டிஏ என்று அழைக்காமல் எப்.டி.ஏ என்றே அழைக்க வேண்டும்,’’ என்றதும் கூட்டம் கலகலப்பில் ஆழ்ந்தது.

Tags : FDA ,Leoni ,Tamil Nadu Textbook Association ,President ,Dindigul Leoni ,NDA ,National Democratic Alliance ,Vazhappadi ,Salem district ,AIADMK ,BJP ,NDA alliance ,
× RELATED சாவு கொடுமையா இருக்கும்; திமுக,...