×

கேரள மாநில நிதி நிறுவன அதிபர் சென்னை வீட்டில் ஈடி சோதனை

சென்னை: கேரளா மாநில நிதிநிறுவன அதிபரின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தாம்பரம் அடுத்த சேலையூர், பரத்வாஜ் தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கி இருப்பவர் ஆஸ்லின். இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎச்டி, 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

கேரளா மாநிலம் கோட்டயத்தை பூர்விகமாக கொண்ட இவரின் பெற்றோர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் ஆஸ்லின் தங்கியிருக்கும் சேலையூர், பரத்வாஜ் தெருவில் உள்ள வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீசாருடன் ஏழு பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Tags : ED ,Kerala State Finance Corporation ,Chennai ,Enforcement Directorate ,Aaslin ,Bharadwaj Street, Selaiyur ,Tambaram ,East Tambaram ,
× RELATED வெளியுறவுக் கொள்கையிலும் Failuremodel எனப்...