- நாயகனை பிரியால், கோடாலி கிராமம்
- தா.பழூர்.
- நாயகனை பிரியாள்
- ஆதி திராவிடர் தெரு
- உதயநத்தம் ஊராட்சி
- கோடலி கீழத் தெரு
தா.பழூர். பிப். 5: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்- 2025-2026-ன் கீழ், நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில்,ரூ 20.34 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி. உதயநத்தம் ஊராட்சியில், கோடாலி கீழத்தெருவில், ரூ 5.00 லட்சம் மதிப்பீட்டில், தார்சாலை அமைக்கும் பணி, ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இதில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேந்திரன் (வ.ஊ), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா, மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சம்பந்தம், தங்கபிரகாசம், வாக்குச்சாவடி பொறுப்பாளர் நீல.மகாலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
