×

FORCIP-500, Cetezon மாத்திரைகள்: புதுச்சேரி மருந்தகங்களில் விற்பனை செய்ய தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் தரமில்லாத இரண்டு மாத்திரைகளை விற்பனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் திருபுவனை செயல்படும் மருந்து நிறுவனத்தில் உற்பத்திக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஆனந்த கிருஷ்னண் மாநிலத்தில் செயல்படும் சில்லறை, மொத்த மருதங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தெலுகானாவின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஹெல்த்கேர் பார்முலேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் FORCIP-500 என்ற பாக்டீரிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் சூப்பர் எஸ் லேபரட்டரியின் Cetezon tablet என்ற அலர்ஜியை தடுக்கும் மருந்துகள் நிலையான தரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தப் பொருட்களை வாங்குவதும் விற்பனை செய்வதும் தடை விதிக்கப்படுவதாகவும், இந்த மருந்துகளின் அளவு குறித்து துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த மருந்துகளை உற்பத்தியாளர், விநியோகஸ்தர்களிடம் திருப்பி அனுப்புமாறும் குறிப்பிட்டுள்ளார். இதைபோல் திருபுவனையில் ரெல்சன் ஹெல்த்கேர் மருந்து உற்பத்தி நிறுவனம் விதிமுறைகளை மீறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிறுவனம் மருந்துகளை உற்பத்தியை நிறுத்துமாறும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : Cetezon ,Puducherry ,Department of Drug Control ,Tirupuan ,Puducherry Drug Control Department ,Officer ,Ananda Krishnan ,
× RELATED ராணிப்பேட்டையில் ஜாகுவார் –...