×

மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.2: மத்திய  மத்திய பட்ஜெட் வெளிடப்பட்ட நாளான நேற்று மத்திய அரசு ஊழியர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் ரயில்வே தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் எஸ்ஆர்எம்யூ மற்றும் ஏஐஆர்எப் சார்பாக மதுரை ரயில்ேவ மேற்கு நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

மதுரை கோட்ட செயலாளர் ரபீக், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் பங்கேற்று பேசினர். ரயில்வே துறை மற்றும் பணிமனைகளில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது .கட்டாயம் ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கை விட வேண்டும். 252 ரயில்களை தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. எஸ்ஆர்எம்யூ ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்ட செயலாளர் அழகுராஜா, ேகாட்ட தலைவர் ரவிசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் நந்தாசிங் நன்றி கூறினார்.

Tags : SRMU ,protest ,government ,
× RELATED காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ரயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்