×

குண்டு எறிதலில் இந்திய பெண் சாதனை

 

அமெரிக்கா: அமெரிக்காவில் நடைபெற்ற ‘நியூ மெக்ஸிகோ டீம் ஓபன்’ தடகளத் தொடரில், இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் மகளிர் உள்அரங்க குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்து தங்கம் வென்று அசத்தினார். அமெரிக்காவில் படிக்கும் 22 வயதான இவர், கடந்த சனிக்கிழமை அல்புகெர்க்கியில் (நியூ மெக்ஸிகோ) நடந்த மவுண்டன் வெஸ்ட் உட்புற டிராக் அண்ட் ஃபீல்ட் சாம்பியன்ஷிப்பில் இரும்பு பந்தை 16.03 மீட்டர் தூரத்திற்கு உயர்த்தினார்.

தனது கடந்த ஆண்டு சாதனையான 16.03 மீட்டரை விட 0.60 மீ கூடுதலாக அதாவது 16.63 மீட்டர் தூரம் வரை எறிந்து தனது சொந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார். இந்த தொடரில் மியா லென்சர் (19.02 மீ) மற்றும் கேபி மோர்ன்ஸ் (17.09 மீ) ஆகியோருக்குப் பிறகு 3வது இடத்தை கிருஷ்ணா பிடித்தார். கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவின் பர்மிங்காமில் நடந்த போட்டியில், தனது சக வீராங்கனை பூர்ணராவ் ரானே அமைத்த 15.54 மீட்டர் தூரத்தை, கிருஷ்ணா ஜெயசங்கர் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : USA ,Krishna Jayashankar Menon ,New Mexico Team Open ,United States ,
× RELATED இந்தியாவுக்கு எதிரான போட்டியை...