- டாடா மாஸ்டர்ஸ் செஸ் அப்துசடோரோவ்
- விஞ்ஸி
- உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர்
- நோடிர்பெக் அப்துசடோரோவ்
- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டி
- வின்சி, நெதர்லாந்து
விஜ்ஆன்ஸீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். நெதர்லாந்தின் விஜ்ஆன்ஸீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. 13 சுற்றுகள் கொண்ட இப்போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்றனர். 13 சுற்றுகள் முடிவில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ், 9 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தார்.
இதன் மூலம் மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி சுற்றில் அவர், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசியை வென்றார். சாலஞ்சர்ஸ் செஸ் போட்டியில் அமெரிக்க வீரர் ஆண்டி உட்வார்ட் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மாஸ்டர்ஸ் போட்டியில் மற்றொரு உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோவ் 8.5 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தார். ஜோர்டென் வான் பாரஸ்ட், வின்சென்ட் கீமர், ஹான்ஸ் நீமான் ஆகிய 3 வீரர்கள் 7.5 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்தனர். யாத்தியாஸ் புளுபாம், யாகிஸ் கான் எர்டோக்மஸ் தலா 7 புள்ளிகளுடன் 4ம் இடத்தையும், அனிஸ் கிரி, குகேஷ், விளாடிமிர் பெடோஸீவ் தலா 6.5 புள்ளிகளுடன் 5ம் இடம் பிடித்தனர். தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா 5.5, அரவிந்த் சிதம்பரம் 4.5 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
