அவனியாபுரம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக, நேற்று இரவு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்கள் அவரிடம் ஒன்றிய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டனர். அதுகுறித்த விரிவான அறிக்கையை நாளை (இன்று) வெளியிடுகிறேன் என பதில் அளித்தார். இதையடுத்து செய்தியாளர் ஒருவர், ‘‘தவெகவில் இணைவது தான் ஓபிஎஸ்க்கு நல்லது’’ என, அக்கட்சி நிர்வாகிகள் கூறி இருக்கிறார்களே என்று கேட்டதற்கு, ‘‘நீங்கள் தவெகவா?’’ என்று கோபமாக கேள்வி எழுப்பிய அவர், மேற்கொண்டு எதுவும் ேபசாமல் விறுவிறுவென விமான நிலையத்திற்குள் விரைந்து சென்றார்.
