×

செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது மாங்காய் பறித்தாரா? செல்லூர் ராஜூ செம கலாய்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது செங்கோட்டையன் மாங்காய் பறித்தாரா, அவர் ஒரு செல்லாக்காசு என்று அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். அவரிடம் நிருபர்கள், ‘‘திமுக – தவெக இடையே தான் போட்டி, எடப்பாடி எத்தனை தேர்தலில் போட்டியிட்டாலும் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறார்னு செங்கோட்டையன் பேசியுள்ளாரே?’’ எனக் கேட்டனர்.

இதற்கு செல்லூர் ராஜூ, ‘‘செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு, அவர் பேச்சை எல்லாம் நீங்கள்தான் பெருசாக எடுத்துக் கொள்கிறீர்கள். எங்களிடமிருந்து போய், யாருமே ஏற்றுக்கொள்ளாததால் தவெகவிற்கு போயிருக்கிறார். இவ்வளவு நாள் கழித்து போய் சேர்ந்திருக்கிறார். அவரைப்பற்றி பேசுவது, கேள்வி கேட்பதை எல்லோரும் மறந்த சூழலில், உங்களை மாதிரி ஆட்கள்தான் கேள்வி கேட்டு திரும்பவும் அவர் பெயரை சொல்லச் சொல்றீங்க. எல்லோருமே மறந்துட்டாங்க. எங்க கட்சியில் நல்லா சாப்பிட்டு, தொண்டனின் ரத்தத்தை வியர்வையாக சிந்தி பதவியை பெறுவாங்க, சுகத்தை அனுபவிப்பாங்க. அவங்களுக்கெல்லாம் நாங்க பதில் சொல்லணுமா?

போனவங்களுக்கெல்லாம் மரியாதை கொடுக்கணுமா? விடுங்க சார், அவங்கள பத்தி பேசாதீங்க. செங்கோட்டையன் பேச்செல்லாம் ஒரு பேச்சே இல்லை. போகுற போக்குல பேசுறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது அதிமுகவில் ஒரு அமைச்சர் கூட சென்று பார்க்கவில்லை எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரே?’’ என கேட்டதற்கு, ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது செங்கோட்டையன் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தாரா? எங்களுடன்தானே இருந்தார்? அதைப்பற்றி பேச வேண்டாம். அப்புறம் நான் சொல்வதை, செங்கோட்டையன் குறித்து செல்லூர் ராஜூ சாடல் என்று செய்தியாக பதிவு செய்து விடுவீர்கள். திருவிழாவில் காணாமல் போனவர்கள் பற்றியெல்லாம் பேச வேண்டாம்’’ என்றார்.

* கட்சி தொடங்கி 3 வருஷமாச்சு…பிரஸ்மீட்டை சந்திங்க விஜய்: அப்படி பண்ணா சாதனைதான்
விஜய் செய்தியாளர்களை சந்திக்கவே இல்லையே என்ற கேள்விக்கு, ‘‘செய்தியாளர்களை விஜய் சந்திச்சிட்டா அது பெரிய சாதனைதான். கட்சி தொடங்குனதை சாதனைன்னு சொல்றாங்க. அதெல்லாம் சாதனையில்லை. பிரஸ் மீட்டை சந்தித்து நீங்கள் கேட்கும் கேள்விக்கணைகளுக்கு எல்லாம் பதில் சொன்னாலே, அது ஒரு சாதனைதாங்க. அவருக்காக பேசுற கூவைங்க… இங்கிருந்து போன செல்லா நோட்டுகளெல்லாம் இதைச் சொல்லி, இந்த மாதிரி ஆகுது, அசிங்கமா இருக்கு, கட்சி தொடங்கி 3 வருஷமாச்சு… பிரஸ்மீட்டை சந்திங்க… அன்றாட பிரச்னையை பேசுங்கன்னு சொல்லச் சொல்லுங்க…’’ என்று செல்லூர் ராஜூ கூறினார்.

Tags : Sengottaiyan ,Thoothukudi ,Sellur Raju ,Madurai ,AIADMK ,former minister ,Thoothukudi shooting ,AIADMK… ,
× RELATED சொல்லிட்டாங்க…