திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விஜய்காந்தின் மகனும், தேமுதிக இளைஞர் அணி தலைவருமான விஜயபிரபாகரன் வந்தார். அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘மக்களை நம்பித்தான் தேமுதிகவை விஜயகாந்த் ஆரம்பித்தார். அவர் இல்லாத கடந்த 2 ஆண்டுகளாக கட்சியை காப்பாற்றி அசைக்க முடியாத சக்தியாக பிரேமலதா மாற்றியுள்ளார். நாங்கள் அரசியலுக்கு வந்ததே உங்களை எம்பி, எம்எல்ஏ, அமைச்சர், கவுன்சிலர் ஆக்கி பார்க்கத்தான். இந்த தேர்தலில் நிர்வாகிகள் தங்களது ஈகோவை தூக்கி எறியுங்கள். 2005ல் தேமுதிகவில் எதற்காக சேர்ந்தீர்களோ அதை நினைத்து, 2026 தேர்தலில் செயல்பட வேண்டும். இந்த தேர்தல் தேமுதிகவின் 2.0 ஆக இருக்கும். நாம் வெற்றி பெறுவோம். கூட்டணி குறித்து நல்ல முடிவை பிரேமலதா அறிவிப்பார்’’ என்று பேசினார்.
