×

ஆட்சியில் பங்கு தேவை இல்லை: வைகோ ‘பளீச்’

கோவை: கோவை விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது போன்ற கோஷங்கள், கோரிக்கைகள் நாங்கள் என்றைக்கும் வைக்கவே இல்லை, அப்படி கோரிக்கை வைக்கின்ற நோக்கமும் இல்லை. திமுக நிச்சயம் தனி பெரும்பான்மை பெறும். மீண்டும் 2026ல் ஸ்டாலின் முதல்வராக அமர்வார், திராவிட மாடல் ஆட்சி தொடரும். கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்த பின்னர்தான் தொகுதிகள் குறித்து பேச முடியும். தொகுதி பங்கீட்டிற்காக திமுக பேச்சுவார்த்தை குழு அமைத்த 3 மணி நேரத்திற்குள், மதிமுக சார்பில் குழு அமைக்கப்படும். எத்தனை இடங்கள் கேட்போம் என்பதை இப்போது செல்ல முடியாது. ஒரு சிலர் தங்கள் மனதிற்கு தோன்றியதை சொல்கின்றனர். ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vaiko ,Coimbatore ,MDMK ,General Secretary ,DMK ,
× RELATED சொல்லிட்டாங்க…