×

நியூசி.யுடன் 5வது டி20 இந்தியா அபார வெற்றி

திருவனந்தபுரம்: இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5வது டி20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணியின் ஓபனர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். மற்றொரு ஓபனர் அபிஷேக் சர்மா 30 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து ஜோடி சேர்ந்த இசான் கிசான், கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக இசான் கிசான் ஆட்டத்தில் அனல் பறந்தது. பந்துகள் எல்லாம் மைதானத்தில் இருந்து வெளியே பறந்தபடி இருந்தன. தொடர்ந்து இசான் கிசான் ஆட்டத்தின் வேகத்தை குறைக்காமல் சதமடித்து 103 ரன்னில் (43 பந்து, 6 போர், 10 சிக்சர்) வெளியேறினார்.

அடுத்து வந்த வந்த ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு ஒரு காட்டு காட்டி 42 ரன்னில் (17 பந்து, 1 போர், 4 சிக்சர்) அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. அடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்தின் பின் ஆலன் 80 ரன்கள் எடுத்தார்.இஷ் சோதி 33,ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிச்சேல் 26 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது சிறப்பான பந்துவீச்சால் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.

* டாப் 5ல் மூணு இடம் நம்மதான்
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை டாப் ஸ்கோரில் இந்தியா ஏற்கனவே வங்கதேசத்திற்கு எதிராக 297 ரன்கள் அடித்து 2வது இடத்திலும், சவுத் ஆப்ரிக்காவிற்கு எதிராக 283 ரன் அடித்து 3வது இடத்திலும் உள்ளது. தற்போது நியூசிலாந்திற்கு எதிராக இப்போட்டியில் 271 ரன்கள் எடுத்து 5 இடத்தையும் பிடித்துள்ளது. முதலிடத்தில் 304 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.

Tags : Newsy ,India ,5th T20 ,Thiruvananthapuram ,New Zealand ,Sanju Samson ,Abhishek Sharma ,
× RELATED 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!