×

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த எலக்ட்ரீஷியனுக்கு ஆயுள் சிறை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம், ஜன. 30: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் (28). கடந்த 2010ம் ஆண்டு திண்டிவனம் பகுதி, இருளர் சமூகத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் மஞ்சுளாவை அவரது தாய் வீட்டிலேயே, விட்டுவிட்டு சென்னைக்கு எலக்ட்ரீஷியன் வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், மஞ்சுளா கர்ப்பம் அடைந்துள்ளார். தற்போது குழந்தை வேண்டாம் என்று கூறி மாத்திரை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார் ராஜேஷ். இந்நிலையில் 2014ம் ஆண்டு, சென்னை திருவேற்காட்டில் வாடகை வீட்டில் மஞ்சுளாவை தங்க வைத்துள்ளார். பின்னர் சில நாட்களில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, பார்த்துவிட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு வந்த ராஜேஷ் திரும்ப செல்லவில்லை. இதனிடையே, சென்னையிலிருந்து வந்த ராஜேஷ் முதல் திருமணத்தை மறைத்து கோமதி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மஞ்சுளா அளித்த புகாரின்பேரில், 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்சி, எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜேஷ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ேமலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags : electrician ,Viluppuram Special Court ,
× RELATED கரூர் எலக்ட்ரீசியன் சேலத்தில் மர்மச்சாவு