×

சீர்காழி அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி சாலைமறியல்

சீர்காழி, ஜன. 30: சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் மதகு அருகே கள்ள சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தியும், சாலை ஆகக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு நிர்வாகி ஜெயக்குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலுக்கு கிராமத்தலைவர்கள் மோகன், கலியமூர்த்தி, சங்கர், கலியபெருமாள், பிச்சப்பிள்ளை, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் சீனிவாசன் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் அருள் ஜோதி, சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கள்ள சாராய விற்பனையை உடனடியாக தடுக்கவும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடையை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் சீர்காழி கொண்டல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவராமன், மாவட்ட தலைவர் வீரராஜ் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராமன், ஒன்றிய செயலாளர் நீதி சோழன், கிளைச்செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Sirkazhi ,Valluvakkudi ,Communist Party of India District Committee ,Executive ,Jayakumar ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்