- ஆட்டமுகாவில் ஓ.
- பன்னீர்
- செல்வம்
- எடப்பாடி பழனிசாமி சிவகத்தம்
- சென்னை
- ஆட்டமுகுவில் ஓ.
- எடப்பாடி பழனிசாமி
- பன்னீர் செல்வம்
- பொதுச் சபை
- பெருஞ்சுவர்
- OPS
- பெருமாள் பொதுக் குழு
சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது என்பது பொதுக்குழு கூடி முடிவெடுத்தது. ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளது. கூட்டணி விவகாரத்தில் அதிமுக மிக தெளிவாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்; அது இறுதியான பின் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் விஜய் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் சிறந்த அரசியல் கட்சி நாங்கள்தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததாக விஜய் சொல்கிறார்? யாருக்காக அதை விட்டுவிட்டு வந்தார்? கரூர் துயர சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத விஜய் ஒரு தலைவரா? கரூர் துயர சம்பவத்தின் போது விஜய் என்ன செய்தார்? துயர சம்பவம் நேரிடும் போது நேரடியாக மக்களை சந்திக்காதவர் எப்படி நல்ல தலைவராக முடியும்? விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர் என்று கூறினார்.
