×

அதிமுகவை மீட்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தேனி: பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக கருத்து தெரிவிக்க கூறியதற்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். பெரியகுளத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஓ.பி.எஸ். செய்தியாளர் சந்தித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது; கூட்டணி குறித்து வதந்திகள் பரப்பப்படுகிறது. எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதை அறியவே ராமநாதபுரத்தில் போட்டியிட்டேன். என்னை தோல்வியடையச் செய்ய பன்னீர்செல்வம் என்ற பெயரில் பலரை ராமநாதபுரத்தில் களமிறக்கினர். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை. தனிக்கட்சி ஒன்றை தொடங்கும் எண்ணம் இல்லை. அதிமுகவை மீட்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

அதிமுக பிரிந்திருக்கிறதா, ஒன்றாக இருக்கிறதா என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடியும், டிடிவியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அதிமுகவில் இணைக்க டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்க வேண்டும். என்னை பார்த்தால் பாவமாக இல்லையா என செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ் கேள்வி கேட்டார். தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒருங்கிணைப்புக் குழு தொடங்கவில்லை என கூறினார்.

Tags : Paneer Selvam ,Theni ,Peryakulathil O. ,Panneirselvam ,
× RELATED தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம் காணப்படும்!