- அம்பேத்கர்
- திருமண
- வீட்டில்
- பெரம்பூர் நெடுஞ்சாலை
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- மு. கே. ஸ்டாலின்
- திரு.
- V.K.
- நகர் சட்டமன்றத் தொகுதி
- சென்னை பெருநகர மேம்பாட்டுக் குழு
- அன்னல்
- திருமண மாளிகை
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.21 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ‘அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை’ திறந்து வைத்து, 10 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
பெரம்பூர் நெடுஞ்சாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.21 கோடியே 50 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த சிறப்புமிக்க திருமண மாளிகையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையிலும், குறிப்பாக திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களபுரம், ஏகாங்கிபுரம், ஆதிசேஷன் நகர், சாஸ்திரி நகர், பிஸ்லின் நகர், ஜோதி நகர், சேமாத்தம்மன் நகர் ஆகிய பகுதி மக்கள் தங்களது இல்லத் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை குறைந்த செலவில், அதிக வசதிமிக்க இம்மண்டபத்தில் மனமகிழ்வுடன் நிறைவாக நடத்திடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கொண்ட 30,000 சதுரடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையில் தரைத்தளத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் மற்றும் சமையலறை கூடமும், முதலாவது தளத்தில் ஒரே சமயத்தில் 175 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் உணவுக்கூடமும், இரண்டாவது தளத்தில் 570 இருக்கைகளுடன் கூடிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம், மணமகன் மற்றும் மணமகள் அறைகளும், மூன்றாம் தளத்தில் 4 எண்ணிக்கையிலான விருந்தினர் அறைகள், மின்தூக்கி வசதிகள், நவீன கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த திருமண மாளிகை கட்டப்பட்டுள்ளது. புதிய அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 இணைகளுக்கு இன்று திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத் தலைவர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர்/முதன்மை செயலாளர் பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
