×

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் குழு பிப்ரவரி முதல் வாரம் தமிழகம் வருகை: மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, பிப்ரவரி முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு தமிழகம் வருகிறது. அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இக் குழு ஆலோசனை நடத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அது தொடர்பான முன்னேற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தலைமையிலான குழு ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தலைமையிலான குழுவினர் தமிழகம் வர உள்ளனர்.

இந்த குழுவினர் 2 நாட்கள் தமிழகத்தில் முகாமிட்டு சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்கின்றனர். முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மேலும் வருவமான வரித்துறை, சிஆர்பிஎப், வணிக வரித்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்த உள்ளனர். இறுதியாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் பத்திரிக்கையாளரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக துணை தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வந்து இதற்கான பணிகள் மற்றும் ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Chief Election ,Tamil Nadu ,Chennai ,Chief Election Commissioner ,Tamil Nadu Assembly ,
× RELATED குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான...