- ஸ்ரீவில்லிபுத்தூர்
- பரமகுரு (எ) குமார்
- டி. மனகாசேரி
- ஸ்ரீவில்லிபுத்தூர் மணிக்கூண்டு
- விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 26: ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநங்கை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு, போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மணிக்கூண்டு பகுதியில் டி.மானகசேரி பகுதியைச் சேர்ந்த பரமகுரு (எ) குமார் (45) என்பவரிடம் பணம் கேட்டு திருநங்கைகள் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் இரண்டு திருநங்கைகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து திருநங்கைகள் சிலர், காவல்நிலையத்தில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திருநங்கை முத்தரசி (24), திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சிவகாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
