×

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை

தூத்துக்குடி, ஜன. 26: தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளரணி துணை அமைப்பாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், ஓன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ரவீந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கல்யாணசுந்தரம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், மாநகர மாணவரணி அமைப்பாளர் வினோத், தொழிலாளர் நல அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, வட்ட செயலாளர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ரெக்ஸ்லின், நாகேஸ்வாி, ஜெயசீலி, பட்சிராஜ், ராஜதுரை, கந்தசாமி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், ஆறுமுகம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thoothukudi ,Minister ,Geethajeevan ,Thoothukudi North District DMK ,Kalaignar Arangam ,North District DMK ,Social Welfare… ,
× RELATED நாகர்கோவில் – கோவை ரயில் இன்று முதல் சாத்தூரில் நிறுத்தம்