×

மின்கம்பி உரசி ஒருவர் பலி

ஒட்டன்சத்திரம், ஜன. 26: உசிலம்பட்டியை அடுத்த மெய்யம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (56). இவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒட்டன்சத்திரம் கே.கே. நகரில் நடைபெறும் மாட்டு சந்தையில் மாடுகள் வாங்குவது வழக்கம்.

இதேபோல் நேற்று நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு, தனது லாரியை ஓட்டி வந்த இளங்கோவன் அதனை நிறுத்தி விட்டு இறங்கும் போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி அவர் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Ottanchathiram ,Ilangovan ,Meiyampatti ,Usilampatti ,Ottanchathiram KK Nagar ,
× RELATED வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி