×

பரமத்தி அருகே கறிக்கடைக்குள் புகுந்த குடிநீர் லாரி

க,பரமத்தி, ஜன. 26: பரமத்தி அருகே விஸ்வநாதபுரியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த குடிநீர் லாரி கடைக்குள் புகுந்தது. பெரியாண்டான் கோவில் பகுதியை சேர்ந்த பிரபு இவருக்கு சொந்தமான குடிநீர் லாரி, தாராபுரம் பகுதியில் நடைபெறும் குடிநீர் விநியோக பணிக்காக சென்று கொண்டிருந்தது. குடிநீர் லாரியை பிரகாஷ் (42) என்ற டிரைவர் ஓட்டிவந்தார். குடிநீர் லாரி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

லாரி, விஸ்வநாதபுரி தண்ணீர் பந்தல் அருகே உள்ள தாராபுரம் பிரிவு சாலையில் திரும்பும் போது, திடீரென ஓட்டுநர் பிரகாஷ் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கறிக்கடை மற்றும் டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. கடைக்குள் யாருமில்லை. அதிர்ஷவசமாக ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் பிரகாஷை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தகவலறிந்த பரமத்தி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரிக்கின்றனர்.

 

Tags : Paramathi ,K ,Viswanathapuri ,Prabhu ,Periyandan Kovil ,Tarapuram ,
× RELATED லைட்ஹவுஸ் கார்னரில் சுகாதார வளாகம் அமைக்க பொது மக்கள் கோரிக்கை