×

குடியரசு தினத்தன்று 157 இடங்களில் கிராமசபா கூட்டம்

கரூர், ஜன. 24: கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26ம்தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்திலுள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் 26ம்தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-27ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், தொழிலாளர் வரவு – செலவு திட்டம், தொழிலாளர் வரவு – செலவு திட்ட பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், ஜல்ஜீவன் திட்டம்,

சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விவரம், தொகுதி மேம்பாட்டுத்திட்டம் சம்பந்தமாக குடியரசு சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் குடியரசு தின கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Gram Sabha ,Republic Day ,Karur ,Karur district ,District Collector ,Thangavel ,
× RELATED புகழூர் நகர அலுவலகத்தில் திமுக ஆலோசனை கூட்டம்