×

காற்றழுத்த தாழ்வு நிலை: கரூரில் மழை

கரூர், ஜன. 26: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரூரில் லேசான மழை பெய்தது. வடகிழககு பருவமழை முடிவடைந்து 20 நாட்கள் கடந்துவிட்டது. தற்போது பனிப்பொழிவு இருந்து வருகிறது. இருப்பினும், கடந்தவாரம் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் லேசான அளவில் மழை பெய்தது.

இதனைத் தொடர்ந்து, ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 4 மணியளவில் அரை மணி நேரம் கரூர் மாவட்டம் முழுதும் லேசான அளவில் சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையின் காரணமாக கரூரில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, இதமான சூழல் நிலவியது.

 

Tags : Karur ,
× RELATED பரமத்தி அருகே கறிக்கடைக்குள் புகுந்த குடிநீர் லாரி