×

குட்கா விற்ற 3 பேர் மீது வழக்கு

கரூர், ஜன. 24: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக, அந்தந்த காவல் நிலைய போலீசாரும், மதுவிலக்கு போலீசாரும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம், வெங்கமேடு, கரூர் டவுன் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த ராமகிருஷ்ணன், ஹரி, பாசுப்ரமணி ஆகிய 3 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் யாரிடம் இருந்து போதை பொருட்களை வாங்கினர். அவருக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரி யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags : Karur ,SP ,
× RELATED புகழூர் நகர அலுவலகத்தில் திமுக ஆலோசனை கூட்டம்