- அறிவியல், கலை மற்றும் கைவினை கண்காட்சி
- பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளி
- சென்னை
- கண்காட்சி
- ஆண்டு விழா
- இளவரசன்
- டாக்டர்
- கே
- வாசுதேவன்
- ரஞ்சனி
சென்னை: பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் கீழ் இயங்கி வரும் மடிப்பாக்கம் – புழுதிவாக்கம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் கலை, கைவினைக் கண்காட்சி மற்றும் ஆண்டு விழா பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் க.வாசுதேவன் தலைமையில் நடந்தது. செயலாளர் வா.ரஞ்சனி, துணைத் தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேஷ், நிர்வாக அதிகாரிகள் பார்த்தசாரதி, தருமன், ரகு, தலைமை ஆசிரியை சொர்ணலதா முன்னிலை வகித்தனர் திரைப்பட இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு வாழ்த்தி பேசினார்.
அவர் பேசியதாவது:
மற்ற நாடுகளில் பணத்திற்கு மதிப்பு உண்டு. ஆனால், நம் நாட்டில் மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் கலாச்சாரத்திற்கு மதிப்பு உண்டு. நம் குழந்தைகளுக்கு கடமை, நேர்மை, நேரம் தவறாமை கற்றுத் தருவதில் பள்ளிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. நமக்கு என்ன தெரியும் என்பதை விட என்ன தெரியாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வரும் காலங்களில் மாணவர்கள் விஞ்ஞானத்துடன் போட்டி போடக்கூடிய சூழல் நிலவுகின்றது. எனவே அதற்கு ஏற்ப அவ்வப்போது உங்களை நீங்களே தகவமைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். மாலையில் நடந்த ஆண்டு விழாவில், பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் சு.பரமசிவன் பங்கேற்று கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
