×

பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்த கேரள புரோக்கர் கைது

சென்னை, ஜன.23: ஜாபர்கான்பேட்டை குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மினுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், விபசார தடுப்பு பிரிவு-2 இன்ஸ்பெக்டர் தலைமையிலான பெண் காவலர்கள் நேற்று முன்தினம் ஜாபர்கான்பேட்டை காசி எஸ்டேட் 3வது ெதருவில் உள்ள பங்களா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சென்னையில் 3 விபசார வழக்குகள் மற்றும் கேரளாவில் இருந்து இளம் பெண்களை சென்னை புரோக்கர்களுக்கு அனுப்பிய முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் (57), தனது கூட்டாளியான கேரள மாநிலம் முகம்மது சையது (50) என்பவருடன் இணைந்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு போலீசார், கேரள புரோக்கர் மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்தனர். அவரிடம் இருந்து வாடிக்கையார்களை பிடிக்க பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த வழக்கில் கேராளவில் இருந்து சென்னைக்கு இளம் பெண்களை கமிஷன் அடிப்படையில் அனுப்பும் முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Kerala ,Chennai ,Assistant Commissioner ,Prostitution Prevention ,Unit ,Yasmin ,Jafargaonpet ,Prostitution Prevention Unit-2 ,Inspector ,
× RELATED மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயிலில் ரூ.54.65...