×

ஆர்ஜேடி தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமனம்

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேசிய செயல்குழு கூட்டம் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதில் ஆர்ஜேடி தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டார். கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அதற்கான முறையான கடிதத்தை தேஜஸ்வியிடம் வழங்கினார். ஆனால் இந்த நியமனம் லாலு பிரசாத்தின் மகளும் தேஜஸ்வியின் சகோதரியுமான ரோகிணி ஆச்சார்யாவுக்கு பிடிக்கவில்லை .

இதுகுறித்து ரோகிணி ஆச்சார்யா தன் எக்ஸ் பதிவில், “ தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காக போராடுவதற்கு பெயர் பெற்ற கட்சி தற்போது, எதிரிகளால் அனுப்பப்பட்ட ஊடுருவல்காரர்கள் மற்றும் சதிகாரர்களின் கைகளில் உள்ளது. அவர்களின் ஒரே நோக்கம், லாலுவின் பெயரை அழிப்பதே, அப்படிப்பட்டவர்கள் தங்களின் மோசமான நோக்கங்களில் பெரிய வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tejasswi Yadav ,RJD National Action Leader ,Patna ,National Executive Committee ,Rashtriya Janata Dal Party ,RJD ,National Action Leader ,Lalu Prasad Yadav ,Tejasvi ,
× RELATED மொழிப்போர் தியாகிகளின்...