- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- கே. சுந்தர்
- சட்டமன்ற உறுப்பினர்
- மதுராந்தபுரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
மதுராந்தகம்: தமிழ்நாடு பல்வேறு வகைகளில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்னை இல்லை என்ற நிலைமை, மகளிர் மறுமலர்ச்சி, கல்வித்துறையில் ஒரு புதுயுகம், விளையாட்டு துறையில் விண்ணை தொடும் முயற்சி என்று அரசு பணிகளின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டை உச்சத்தை எட்டியிருந்த நிலையில் மக்களோடு மக்களாக களத்தில் நெஞ்சுறுத்தியுடன் கொரோனா வார்டில் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறியது இந்தியாவில் எந்த முதல்வரும் செய்ய முடியாத செயலை செய்து காட்டியவர் முதல்வர் திமுக தலைவர் தலைமையில் லட்சிய பயணம் தொடர்வோம், இயக்கம் காப்போம், தமிழ் வளர்ப்போம், தமிழினம் உயர பாடுபடுவோம் என்று ஒவ்வொரு கழக அடிப்படை உறுப்பினரிலிருந்து மேலிட பொறுப்பாளர்கள் வரை தலைவரின் பின்னால் அணிவகுத்து நிற்பது எந்த ஒரு கட்சியிலும் கண்டிராத காட்சியாக திகழ்கிறது.
கட்சியையும் ஆட்சியையும் இரட்டை குழல் துப்பாக்கியாக ஒருசேர இயக்கும் வித்தையையும், அரசு நிர்வாகத்தையும், அரசியல் கொள்கையையும், செயல்படுத்தும் வல்லமை படைத்த தலைவராக 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் அதிசயமும், தானும் இயங்கி மற்றவர்களையும் இயங்கும் ஆற்றலும் பெருந்தன்மையும் எந்தச் சூழ்நிலையிலும் கொள்கை யினை விட்டுக் கொடுக்காத மன உறுதியும் ஒன்று சேர செயல்படுபவர் எங்கள் தலைவர். மாநில உரிமைப் போராட் டமாக இருந்தாலும் சமூக நீதி காக்கும் போராட்டமாக இருந்தாலும் ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பதாக இருந்தாலும் எங்கள் தலைவர் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் முன்னணி தலைவர்.
தமிழர் அடையாளம் எங்கும் நிலைத்திருக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தற்பொழுது உள்ளது. சர்வதேச முதலீடுகளை ஈர்க்க துபாய், அமெரிக்கா, அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டு ட்ரில்லியன் டாலர் அளவிற்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் எத்தனையோ வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி பல்லாயிரம் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கியது எண்ணில் அடங்கா சாதனையாகும்.
மேலும் இதனை விட எண்ணிலடங்கா சாதனைகளின் பட்டியல் இதோ கொரோனா நிதியுதவி நான்காயிரம் வழங்கியது. அரசு பேருந்தில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கிகளின் பெற்ற கடன்களும் நகை கடன்களும் தள்ளுபடி. கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கி உயர்கல்வி உறுதித் திட்டம். மாநகராட்சியில் 50 சதவீதம் மேல் பெண்களுக்கு ஒதுக்கி அவர்களை வணக்கத்துக்குரிய நேயர்கள் ஆக்கிய சாதனை.
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடும்ப அட்டைதாரர்களின் பெயரிலேயே வழங்கப்படும் வீடுகள்,
பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், மாணவர்களின் திறன் மேம்பாடு, நான் முதல்வன் திட்டம், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, தமிழ்நாடு மாணவர்கள் தரணியை வென்றிட தமிழ் புதல்வன் திட்டம், ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு தமிழ்நாட்டை உயர்த்தியதற்கான அமெரிக்கா வெற்றிப்பயணம், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000, இத்தனை திட்டங்களை தமிழ்நாடு மக்களுக்காக கொண்டு சேர்த்து வருகிறார். முத்தமிழறிஞர் கலைஞர் கூறியதுபோன்று உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றாலே திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்தான் என க.சுந்தர் எம்எல்ஏ புகழாரம் சூட்டியுள்ளார்.
