×

பஸ்சில் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 6 பேர் கைது

நெய்வேலி: நெய்வேலி பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பஸ்சில் 21 கிலோ கஞ்சா மூட்டை எடுத்து வந்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், ஒடிசாவை சேர்ந்த அபிலாஷ் குரு (28), அலிசா (24), மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த குட்டி தேவா (24), சுதாகர் (27), கடலூரை சேர்ந்த ஜீவா (25), சந்துரு (26) என தெரிய வந்தது.

இவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து நெய்வேலி பகுதிக்கு பஸ்சில் எடுத்து வந்து விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Neyveli ,Neyveli Arch Gate ,
× RELATED கோட்டயம் அருகே கன்னியாஸ்திரியை...