×

மீன்பிடி படகுகளில் கடத்திய ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பு போதை பவுடர் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 11 பேர் கைது

ராமேஸ்வரம்: இலங்கையில் கடத்தி வரப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான 296 கிலோ போதைப்பவுடர் பறிமுதல் ெசய்யப்பட்டது. இது தொடர்பாக 11 பேர் கைதாயினர். இலங்கையின் தெற்கு பகுதியிலுள்ள திக்கோவிட்டவில் இருந்து 100 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் பயணித்த, 2 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் படகை சோதனை செய்ததில் கடத்தி வரப்பட்ட 184 கிலோ ஹெராயின், 112 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த 11 பேரை கடற்படையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை நேற்று திக்கோவிட்ட கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இலங்கை கடற்படை தளபதி பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இதில் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த போதை பவுடரின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 ஆயிரம் கோடியாகும்.

Tags : Sri Lanka ,Rameshwaram ,Indian Ocean ,Tikkovit ,southern ,
× RELATED கோட்டயம் அருகே கன்னியாஸ்திரியை...