திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரியில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ சபை உள்ளது. இந்த சபைக்கு சொந்தமாக ஒரு மருத்துவமனையும், அதை ஒட்டி கன்னியாஸ்திரிகள் ஆசிரமமும் உள்ளது. பொன்குன்னம் என்ற பகுதியைச் சேர்ந்த பாபு தாமஸ் (45) என்பவர் இந்த மருத்துவமனையில் ஊழியர் நலன் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன் இங்குள்ள ஒரு கன்னியாஸ்திரியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த கன்னியாஸ்திரி சங்கனாச்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாபு தாமசை கைது செய்தனர். இவர் மேலும் சில கன்னியாஸ்திரிகள் உள்பட பலரை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
