உடுமலை, ஜன. 24: உடுமலை அருகே உள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் செந்தாமரைச் செல்வி வரவேற்றார். தமிழாசிரியர் சிவராஜ், ‘செந்தமிழன் தாக்கம்’ என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியை வசந்தாராணி, ஈஸ்வரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
தமிழறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் தமிழ் மொழியின் பெருமையை பகிர்ந்து கொண்டனர். முடிவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

